2008-05-30
தசாவதாரம் தள்ளிப்போவது ஏன்? ஸ்பெஷல் ரிப்போர்ட்
தசாவதாரம் தள்ளிப்போவது குறித்து எக்ஸ்குளூசிவ் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் கமல்ஹாசன் 10 அவதாரம் எடுக்கும் தசாவதாரம் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் பட ரீலிஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தசாவதாரம் தள்ளிப்போவது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் பல கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. கோர்ட்டில் அளித்துள்ள உறுதியை காப்பாற்றுவதற்காக படத்தில் சில மாற்றங்கள் செய்வதால்தான் தசாவதாரம் மீண்டும் தள்ளிப்போகிறது என்ற தகவல்கள் தெரியவந்துள்ளன.
இதுபற்றி ஆஸ்கார் நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். அவர் பல்வேறு எக்ஸ்குளூசிவ் தகவல்களை நம்மிடம் தெரிவித்தார். தசாவதாரம் குழுவினர் கோர்ட், கேஸ் என்று அலைந்ததால் இறுதிகட்ட பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு விட்டது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கு இன்னமும் டப்பிங் பணிகள் நடைபெறவில்லை. இப்போதுதான் அதற்கான பணி துவங்கவிருக்கிறது. படத்தின் சில கிராபிக்ஸ்களில் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் படம் ரீலிஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலில் கமல் சார் தலையிட்டு சில கிராபிக்ஸ்களில் மட்டும் மாற்றம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். கோர்ட்டில் உறுதியளித்தபடி சர்ச்சைகள் எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் சில காட்சிகளை மாற்றும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள்அனைத்தும் மும்பையில் நடந்து வருகிறது, என்றார்.
கண்டிப்பாக ஜுன் 12ம் தேதி படம் வருமா? என்று அந்த நிர்வாகியிடம் கேட்டதற்கு, ரசிகர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் வரும் என்றார் பொத்தாம்பொதுவாக...! கமல்ஹாசனை தொடர்பு கொள்ள முன்றோம். அவர் நம்மிடம் சிக்கவில்லை.
(சினிமா நிருபர் குழுவின் சினிமா செய்தி சேவை குறித்து உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!)
Labels:
dasavatharam,
Special report
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
Good..!
ரிப்போர்ட்டர் சார்...
குமுதம் புத்தகம் பத்திக்கிச்சு பகுதியில் இந்த வாரம் ஒரு கிசுகிசு போட்டிருக்கிறார்கள். யார் அந்த கருப்பு நடிகர்?
//யார் அந்த கருப்பு நடிகர்?//
கேள்விக்கு நன்றி நண்பரே... கிசுகிசுவில் சிக்கியுள்ள அந்த நடிகர் வேறு யாருமல்ல... நடிகர் ராகவா லாரன்ஸ்.
அந்த நடிகை ஷ்நேஹா தானே ?
//Bangalore Jims said...
அந்த நடிகை ஷ்நேஹா தானே?//
ஆமாங்க...!
இன்னுமா தள்ளிப்போவும்..வெளங்கிரும்
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!