CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-29

6ம் வகுப்பில் ரஜினி பற்றிய பாடம்


கர்நாடக மாநிலத்தில் ‌பஸ் கண்டக்டராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய சிவாஜிராவ் கெய்க்வாட், இன்று அகில உலகமும் போற்றும் சூப்பர் ஸ்டாராக தன்னை உயர்த்திக் கொண்டிருக்கிறார். அவரது முன்னேற்றப் பாதையை பலரும் பறை சாற்றிக்‌ கொண்டிருக்கும் வேளையில் பள்ளிப் பாட புத்தகமும் புகழ் பாடப்போகிறது.
ஆறாம் வகுப்பு சி.பி.எஸ.சி. பாடப்புத்தகத்தில், செய்யும் தொழிலில் பெருமிதம் என்ற தலைப்பிலான பகுதி ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நிலையை உயர்த்திக் கொண்ட காலக்கட்டத்தின் நிகழ்வு விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த பாடத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சம் வருமாறு:-

கடந்த 1970களில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வந்த ரஜினிகாந்த் (அப்போது சிவாஜி ராவ்) தனது நண்பர் பகதூருடன் சினிமாவுக்குப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது நாடகங்கள் சிலவற்றில் நடித்த ரஜினியின் ஆர்வத்தையும் ஆற்றலையும் கண்டுகொண்ட பகதுர், சினிமாவுக்கு முயற்சி செய்யுமாறு ரஜினிக்கு ஊக்கமளித்தார்.

பகதுரின் வலியுறுத்தலுக்கு இணங்க, சென்னையிலுள்ள திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பைக் கற்றுக்கொண்டார் ரஜினி. 1974 முதல் 1976 வரை பகதுரின் பண உதவியுடன் படிப்பை முடித்த ரஜினி, இயக்குனர் கே.பாலச்சந்தரின் படத்தில் நடிகராக அறிமுகமானார். அதற்குப் பிறகு நடந்தவற்றை உலகமே அறியும். தற்போது ரஜினிகாந்த் சினிமா துறையின் மூலம் உலக அளவில் புகழ்பெற்று விளங்கினாலும், தனது பழைய வாழ்க்கையையும், தாம் செய்த வேலைகளையும் மறவாமல் இருக்கிறார்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த படத்தின் கடைசியில், செய்யும் தொழில் எதுவானாலும், அதில் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.

இதுபற்றி கருத்து கேட்பதற்காக சூப்பர் ஸ்டாரை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை.

1 comments:

பாண்டி-பரணி said...

நல்ல வசிப்பு உள்ள தலங்களில் இதுவும் ஒன்று

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!