CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-30

மீண்டும் தள்ளிப்போகிறது தசாவதாரம்


உலக நாயகன் கமல்ஹாசன் 10 வித்தியாசமான கெட்டப்களில் பட்டையை கிளப்பியிருக்கும் படம் தசாவதாரம். இந்த படத்தை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார். பல்வேறு சர்ச்சைகள், பிரச்னைகள், வழக்குகளை கடந்து தசாவதாரம் படம் ரீலிசுக்கு தயாராகி விட்டது. முதன் முறையாக தமிழ்நடிகர் ஒருவர் 10 அவதாரம் எடுக்கவிருப்பதால் கமல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலக தமிழ் ரசிகர்கள் அனைவரும் தசாவதாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

வருகிற ஜுன் 6ம் தேதி தசாவதாரம் ரீலிஸ் ஆகும் என்று கடந்த வாரம் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தசாவதாரம் ரீலிஸ் மேலும் ஒரு வாரம் தள்ளிப்போகிறது. (இதுபற்றி ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டுள்ளோம்).

தசாவதாரம் ரீலிஸ் குறித்து ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் கேட்டதற்கு, தசாவதாரம் படத்துக்கு தமிழ், தெலுங்கு, இந்தியில் ஆயிரத்துக்கும் அதிகமான பிரிண்ட்டுகள் போடவேண்டியுள்ளது. அதற்கு சில நாட்கள் பிடிக்கும் என்பதால் ரீலிஸ் தேதியை ஒரு வாரம் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!