CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-17

தசாவதாரம் அனுபவம் : அசின் பேட்டி



தசாவதாரம் படத்துக்கு அடுத்தடுத்து சிக்கல் ஒருபுறம் வந்து கொண்டிருக்கிறது. ரீலிஸ் தேதியை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இது தமிழக நிலவரம். தசாவதாரத்தில் நடித்துள்ள அசின் தற்போது மும்பையில் இந்தி கஜினி படத்தி சூட்டிங்கில் பிஸியாகி விட்டார். தசாவதாரம் வெளியாவதை தானும் ரொம்பவே எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறும் அசின், தசாவதாரம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:&

தசாவதாரம் படத்தில் உங்களுக்கு என்ன கேரக்டர்?

தசாவதாரம் படத்தில் எனக்கு குடும்பப் பெண் வேடம். அதனால் மார்டன் டிரஸ்சும் இல்லை. கிளாமர் டிரஸ்சும் இல்லை. ஒரேயரு பாடலுக்கு மட்டும் கொஞ்சம் மார்டன் டிரஸ்ஸை பயன்படுத்தியிருக்கிறேன். என்னுடைய கேரக்டர் பெயர் ஆண்டாள். அக்ரஹாரத்து பெண். மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறேன். ஒரு காட்சியில் இயற்கையை மறைப்பதற்காக எண்ணெய் கலவையை முகத்தில் பூசி நடித்திருக்கிறேன். தசாவதாரத்தின் தமிழ் பதிப்பில் எனக்கு நானே டப்பிங் பேசியிருக்கிறேன். படத்தில் நிறைய சேஸிங் காட்சிகள் இருக்கிறது. நான் கமல் சாருடன் சேர்ந்து நிறைய காட்சிகளில் ஓடிக்கொண்டே இருப்பேன்.

மல்லிகாஷெராவத்தின் கேரக்டர் என்ன?

தசாவதாரத்தில் நானும், மல்லிகாஷெராவத்தும் நடித்துள்ளோமே தவிர, இரண்டு பேரும் இணைந்து நடிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் சூட்டிங்கின்போது நாங்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்ததே இல்லை. அவர்களது கேரக்டரைப் பற்றி நான் சொல்லக்கூடாது.

தசாவதாரத்தால் நிறைய வாய்ப்புகள் போயவிட்டது என்று புலம்புகிறீர்களாமே?

அப்படியெல்லாம் இல்லை. உலக நாயகனாக போற்றப்படுகிற கமல் சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று எத்தனையோ நடிகைகள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். இரண்டு வருடம் இரண்டு மாதங்கள் போல கடந்து விட்டன.

கமலுடன் நடித்த அனுபவம் பற்றி?

ஒரு கேரக்டர் என்றாலே பின்னியெடுப்பார். தசாவதாரத்தில் 10 கேரக்டர். டிரைலரை பார்த்து பிரமித்து போய்விட்டேன். இவ்வளவு அனுபவமும், பக்குவமும் என்னை கவர்ந்த விஷயங்கள். மீண்டும் இப்படியரு வாய்ப்பு கிடைக்குமா? என்பது தெரியவில்லை. டப்பிங் பேசும்போது பல விஷயங்களை கமல் சார் எனக்கு சொல்லிக் கொடுத்தார். உலக அளவில் பேசப்படுகிற இந்த படத்தை பார்க்க நானும் ஒரு ரசிகையாக ரொம்ப ஆவலுடன் காத்திருக்கிறேன்.

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பற்றி?

டைரக்டர் ரவிக்குமார் சார் பற்றி சொல்லிக்கிட்டே இருக்கலாம். அவருடன் ஏற்கனவே வரலாறு படத்தில் பணியாற்றியிருக்கிறேன். பழகுவதற்கு இனிமையான மனிதர். எல்லா வேலைகளையும் தானே எடுத்து செய்வார்.

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!