CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-19

கவர்ச்சிக்கு தாவிய இன்னொரு ‌‌ஹோம்லி நாயகி


ஹோம்லியாக தோன்றிய தமிழ் நடிகை ஒருவர் திடீரென கவர்ச்சிக்கு தாவியிருக்கிறார். நடிகைகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம். ரகம். நமீதா போல வரும்போதே கிளுகிளுப்பாக வந்து முன்னணி இடத்தை பிடிப்பது முதல் ரகம். நயன்தாரா, மோனிகா போல முதலில் ஹோம்லியாக வந்து பின்னர் திடீரென கவர்ச்சிக்கு தாவி ரசிகர்களை கிறங்கடிப்பது இரண்டாவது ரகம். வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று சாயாசிங் போல ஸ்டேட்‌மெண்ட் விட்டு கவர்ச்சி காட்டுபவர்கள் மூன்றாவது ரகம்.

இதில், இரண்டாது ரக பட்டியலில் இடம் பிடித்துள்ளார் நடிகை அஞ்சலி. கற்றது தமிழ் படத்தில் தனது உருக்கமான நடிப்பின் மூலம் சினிமா ரசிகர்களை கண்கலங்க வைத்தவர் நடிகை அஞ்சலி. ஆந்திராவை சேர்ந்த இவர் சரளமாக தமிழ் பேசுவதால் தமிழில் முன்னணி இடத்தை பிடித்து விடவேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளார்.

தற்போது அவர் சுந்தர்சியுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்த படத்தில் அஞ்சலி கவர்ச்சியில் பின்னியெடுத்திருக்கிறாராம். அதுவும் ஒரு குத்துப்பாட்டில் அம்மணி அரைகுறை ஆடையுடன் போட்டுள்ள ஆட்டம் ரசிகர்களை கண்டிப்பாக கிறங்கடிக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம். அஞ்சலி தவிர இந்த படத்தில் மாளவிகாவுக்கும் ஒரு குத்துப்பாட்டு இருக்கிறதாம்.

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!