CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-01

செக்ஸ் கொடுமை பற்றிய புது தமிழ்சினிமா




செக்ஸ் கொடுமைகளை மையப்படுத்தி எடுக்கப்படும் சினிமாக்கள் தமிழ் திரையுலகுக்கு புதிதல்ல. ஆனாலும் இவர் கொஞ்சம் வித்தியாசமாகவே செக்ஸ் கொடுமைகளை விளக்கப் போகிறாராம். டைரக்டர் விஷ்ணுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய நீலன் சேகர் இயக்கும் படம் அலிபாபா. இப்படத்தில் டைரக்டர் விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணாதான் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை தயாரிக்கப் போவது கிருஷ்ணாவின் தந்தை பட்டியல் சேகர். ஒளிப்பதிவு செய்பவர் தினேஷ்குமார்.


நடிகர் கிருஷ்ணா தமிழ் சினிமாவுக்கு புதுமுகம் இல்லை. அஞ்சலி படத்தில் நடித்த குழந்தை நட்சத்திர பட்டாளத்தில் இவரும் இடம்பெற்றிருந்தாராம். தற்போது அமெரிக்காவில் படித்து விட்டு தமிழகம் திரும்பியிருக்கிறார். திரும்பிய கையோடு ஹீரோ அவதாரம் எடுக்கிறார். அலிபாபா படத்தில் நடிகர் கிருஷ்ணா டூப் இல்லாமல் சண்டை போடுகிறாராம். அதுவும் பெண்களுக்கு எதிரான செக்ஸ் கொடுமைகளுக்கு எதிரான சண்டையில் பின்னியெடுக்கிறாராம். படத்தில் பெண்கள் எப்படியெல்லாம் செக்ஸ் டார்ச்சருக்கு ஆளாகிறார்கள் என்று விரிவாக விவரித்திருக்கிறார்களாம்.

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!