சிவாஜிகணேசன், கமல்ஹாசன், விக்ரம் வரிசையில் வித்தியாசமான கேரக்டர்களுக்கு பொருத்தமான நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. கேரக்டருக்கு ஏற்றபடி தன்னையே மாற்றிக் கொள்ளும் சூர்யா தற்போது டைரக்டர் கவுதம் மேனன் இயக்கத்தில் வாரணம் ஆயிரம என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யா 17 வயது இளைஞர் முதல் 65 வயது முதியவர் வரையிலான தோற்றத்தில் தோன்றுகிறார். இளமைக்காலத்தின்போது பாடி பில்டராக வரும் சூர்யா, இதற்காக தன்னை நிஜ பாடி பில்டராகவே மாற்றியுள்ளார். கட்டழகு நாயகனாக மாறியிருக்கும் சூர்யா, வாரணம் ஆயிரம் படம் மூலம் அடுத்த மைல்கல்லை தொடுவார் என்பதை அவரது கட்டுடலே சொல்கிறது.
செய்தி : தினமலர்
செய்தி : தினமலர்
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!