கோவாவில் கற்பழித்து கொல்லப்பட்ட ஸ்கார்லெட் என்று பெண்ணின் கதையை சினிமா படமாக எடுக்கப்போகிறார் பாலிவுட் இயக்குனர் ஒருவர்.
கோவா மாநிலத்தில் சமீப காலமாக இளம்பெண்கள் மர்மமான முறையில் இறப்பதும், சடலம் கடற்கரையில் ஒதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிட்டனை சேர்ந்த ஸ்கார்லெட் என்ற இளம்பெண்ணும் மர்மமான முறையில் கடற்கரையில் இறந்து கிடந்தார். அவர் கற்பழித்துதான் கொல்லப்பட்டார் என்று ஸ்கார்லெட்டின் உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். ஆனால் கோவா போலீசார் மறுத்தனர். இதையடுத்து இவ்வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு கைமாறி நடந்து வருகிறது.
இந்நிலையில் ஸ்கார்லெட் விவகாரத்தை படமாக எடுக்க பாலிவுட் இயக்குனர் முடிவு செய்துள்ளார். அவர் பெயர் பிரபாகர் சுக்லா. பெரும் சலசலப்பை ஏற்படுத்திய ஸ்கார்லெட் கதையை சினிமாவுக்கு ஏற்ப சில மாற்றங்களுடன் எடுக்கவிருப்பதாக கூறும் பிரபாகர், இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என்றார்.

0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!