2008-05-19
அடுத்த படத்துக்கு விஜய் ரெடி : நயன் ஜோடி
அழகிய தமிழ் மகன், குருவி என அடுத்தடுத்து இரண்டு படங்கள் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லாததால் அப்செட் ஆகியிருந்த விஜய் அடுத்த படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார்.
போக்கிரி படத்தை இயக்கிய நடிகர் பிரபுதேவாதான் விஜய்யின் அடுத்த படத்தையும் இயக்கவிருக்கிறார். இந்த படம் மெகா ஹிட் இந்திப்படமான சோல்ஜர் படத்தின் ரீமேக் தான். ஐங்காரன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
தமிழ் சோல்ஜரில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ரகுவரன் இடத்தை நிரப்பும் வகையில் வில்லத்தனத்தில் வித்தியாசத்தை காட்டி வரும் பிஜுமேனன்தான் சோல்ஜரிலும் வில்லன். இத்தாலி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலு படப்பிடிப்பை நடத்த பிரபுதேவா திட்டமிட்டிருக்கிறார்.
இந்த படத்துக்கு சிங்கம் என்று முதலில் பெயரிட்டனர். சிங்கம் என்ற தலைப்பை டைரக்டர் ஹரி ஏற்கனவே பதிவு செய்து வைத்திருப்பதால் வேறு தலைப்பை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதுபற்றி நடிகர் பிரபுதேவா கூறுகையில், இந்தி சோல்ஜர் படத்தை டைரக்டர் அப்பாஸ் மஸ்தான் இயக்கியிருந்தார். பாபி தியோல், ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் நடித்திருந்தனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரிய ஹிட் ஆன் படம். முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்பதால் விஜய்க்கு இப்படம் பொருத்தமாக இருக்கும். ஏற்கனவே போக்கிரி படம் விஜய்க்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதேபோல இந்த படமும் ஹிட் ஆகும், என்றார்.
சோல்ஜர் படத்தின் கதை பற்றி கேட்டபோது, இதுவும் பழிவாங்கும் கதைதான். படத்தில் ராணுவ அதிகாரியான தந்தையை கொல்பவர்களை விஜய் பழிவாங்குகிறார். இடையிடையே காதல், குத்தாட்டம் என்று 100 சதவித பொழுதுபோக்கு அம்சத்துடன் இருக்கும்,என்றார் பிரபுதேவா.
Labels:
vijay
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!