2008-05-18
நமீதாவுக்கு 20 வயதுதானாம்!
பொதுவாக நடிகர்கள், நடிகைகள் தங்களது வயதை வெளிப்படையாக தெரிவிப்பதில்லை. வயதான் தோற்றம் வந்தால்தான் வயதும் வெளிவரும். இதற்கு தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத தூணாக இருக்கும் நமீதா மட்டும் விதிவிலக்கா என்ன?
நமீதாவுக்கு இப்போது எத்தனை வயது? என்பது அவருக்கும், அவரது பெற்றோருக்கும் மட்டுமே தெரிந்த விஷயம். ஆனால் அம்மணி தனக்கு 20 வயதுதான் ஆகிறது என்று சொல்லி வருகிறார். சமீபத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றில் வெளியான வதந்தி பகுதியில் நமீதாவுக்கு 20 வயது என்ற தகவல் உண்மைதான் என்று வெளியிடப்பட்டிருந்தது.
பிரம்மாண்ட உருவத்துடன் இருக்கும் நமீதாவுக்கு 20 வயதுதான் ஆகிறது என்பதை கேட்டால் யாருக்குத்தான் சந்தேகம் வராது? நமீதாவிடமே கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில்.... யெஸ்...ஐ யம் ஒன்லி 20, என்றார். (இன்னும் எத்தனை வருடத்துக்கு இப்படி சொல்லப்போகிறாரோ தெரியவில்லை!)
நமீதா ரசிகர்களை இதுவரை நீங்கள் நமீதாவைப் பார்த்து மட்டும்தான் கிறங்கியிருப்பீர்கள், இனி நமீதாவின் வயதைப் பார்த்தும் கிறங்குங்கள்.
நமீதாவின் வயதைப் பற்றி குறி்ப்பிட்டு விட்டு, அவரைப் பற்றி எதுவும் தெரிவிக்காமல் இருக்க முடியுமா? நிருபரின் டைரியில் இருந்து நமீதா பற்றிய சிறு குறிப்பு:-
குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த நமீதாவின் முழு பெயர் நமிதா கபூர். மாடலிங்கில் ஆர்வம் மிக்க இவர் 2001ஆம் ஆண்டு மிஸ். இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். சொந்தம் என்ற தெலுங்கு படத்தில் அவர் முதன்முதலாக நடித்தார். அதன் பின்னர் தமிழ் திரையில் ப்ரண்ட்ஸ் படத்தை இயக்கிய சித்திக்கின் எங்கள் அண்ணா என்ற படம் மூலம் அறிமுகமானார்.
2001 மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டபோது அதிகபுள்ளிகளுடன் முதலிடம் பெற்றிருந்தபோதிலும், இறுதி சுற்றில் நடுவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மொழி பெயர்ப்பாளரை பயன்படுத்தியதால் வெற்றிவாய்ப்பினை இழந்தார்.
தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வரும் நமீதா ஏய் படத்தில் அர்ஜூனா அர்ஜூனா பாடல் மூலமாக கவர்ச்சியில் கிறங்கடித்தார். இவர் தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
Labels:
Namitha
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!