2008-05-18
எங்கள் ஆசானில் அரசியல் பஞ்ச் : விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான படம் அரசாங்கம். இந்த படத்தின் பெயர்தான் அரசாங்கமே தவிர படத்தில் அரசாங்கத்தில் குறிப்பிடும் படியிலான அரசியல் பஞ்ச் வசனங்கள் இடம்பெறவில்லை. இது படத்தை பார்க்கச் சென்ற விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சித் தொண்டர்களுக்கு பிடிக்கவில்லையாம். இந்த அதிருப்தியை தொண்டர்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர்.
தலைவர் எதை செய்தாலும் சரியாக, சரியான நேரத்தில் செய்வார், என்று தொண்டர்களை ஆறுதல் படுத்தினார்கள். இந்தகவல் விஜயகாந்தின் காதுகளுக்கு எட்டியதும், கண்டிப்பாக அடுத்த படத்தில் (எங்கள் ஆசான்) நீங்கள் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களும் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
இதனால் விஜயகாந்த் கட்சி தொண்டர்கள் குஷியடைந்திருக்கிறார்கள். எங்கள் ஆசான் படத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக்கட்சி என்று சகட்டு மேனிக்கு சாடும் அரசியல் பஞ்ச் டயலாக் இருக்கும் என்பதை எதிர்பார்க்கலாம்.
தே.மு.தி.க. தொண்டர்களுக்கு அரசியல் பஞ்ச் ஓ.கே... எங்களுக்கு என்ன இருக்கிறது என்று கேட்கும் சினிமா ரசிகர்களுக்காக கொசுறு தகவல் : படத்தின் நாயகி ஷெரில்பிண்டோ, எங்கள் ஆசானில் நகராட்சி தலைவர் வேடத்தில் நடிக்கிறார். நகராட்சி தலைவி என்றதும், சேலை கட்டி வருவார் என வருத்தப்படாதீர்கள். கனவுப்பாடலில் கவர்ச்சி விருந்து படைக்க உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!