நடிகை ஸ்ரேயாவுக்கு நீச்சல் உடையில் நடிக்குமாறு தொல்லை கொடுக்கப்படுகிறது.
பிரபல மேக்ஸிம் பத்திரிகையில் அட்டைப்படத்தில் இடம்பெற்ற ஸ்ரேயா நீச்சல் உடையில் அசத்தலான போஸ் கொடுத்திருந்தார். இதனை பார்த்த பின்னர் கோலிவுட்டில் பல இயக்குனர்கள் ஸ்ரேயாவை தொடர்பு கொண்டு பட வாய்ப்புகளை தருவதாக தெரிவித்துள்ளனர். அதோடு நீச்சல் உடையில் நடித்துக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்தது. இதனை இப்போது வெளியிட்டிருக்கும் ஸ்ரேயா, தமிழ் சினிமாவில் நீச்சல் உடையில் நடிக்கப்போவதில்லை என்று கூறி விட்டார். மும்பையில் இருந்து வெளிவரும் ஒரு நாளிதழுக்கு ஸ்ரேயா அளித்திருக்கும் பேட்டியில், ஒரு பத்திரிகைக்காக, அதுவும் புகழ் பெற்ற பத்திரிகைக்காக நான் பிகினி உடையணிந்து போஸ் கொடுத்தேன். சினிமாவில் அப்படிப்பட்ட சீன்களில் நடிக்க முடியாது. அப்படியே நடித்தாலும் பாலிவுட் தயாரிப்பாளர் யாஷ்ராஜ் சோப்ராவின் படமாக இருந்தால் மட்டுமே நடிக்க வாய்ப்புள்ளது என்றார். அதற்கான காரணத்தை கூற மறுத்து விட்டார் ஸ்ரேயா.
2008-08-26
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!