குசேலன் சர்ச்சைகள் கொஞ்சம் அடங்கியுள்ள நிலையில் ரஜினியின் ரோபோ படம் குறித்த தகவல்கள் மெல்ல மெல்ல கசியத் தொடங்கியுள்ளது.
ரோபோவில் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில்தான் படமாக்கப்படவிருக்கிறது என்பது தெரிந்த சங்கதிதான். இதற்காக ரஜினிகாந்த் கடந்த வாரத்தில் அமெரிக்கா சென்று திரும்பியுள்ளார். இந்நிலையில் படத்தில் உலக அதிசங்களில் ஒன்றான சீனப்பெருஞ்சுவரையும் கொண்டு வர ஷங்கர் முடிவு செய்திருக்கிறாராம். க்ளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு 10 முதல் 15 நிமிடங்கள் ரஜினிகாந்தும், ஐஸ்வர்யா ராயும் பங்கேற்கும் காட்சியை சீனப்பெருஞ்சுவரில் படமாக்க திட்டமிட்டுள்னார்.
ஏற்கனவே ஜீன்ஸ் படத்தில் 7 உலக அதிசயங்களை காட்டிய ஷங்கர், ஒரு சென்டிமென்டுக்காக சீனப்பெருஞ்சுவரை விரும்புகிறார் என்கிறார்கள் ரோபோ படக்குழுவை சேர்ந்தவர்கள்.
2008-08-18
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே..!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!