CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-08-18

தமிழ் சினிமாவில் நிர்வாண காட்சி ஏற்படுத்தும் சர்ச்சை



புதிதாக எடுக்கப்பட்டு வரும் தமிழ் சினிமா ஒன்றில் நாயகன் நிர்வாணமாக போலீஸ் லாக்கப்பில் இருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இந்த ஸ்டில் வெளியிடப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.

ராயல் பெண்டகன் நிறுவனம் தயாரிப்பில் புதுமுக டைரக்டர் தர்மலிங்கா இயக்கும் படம் பிரம்ம தேவா. இந்த படத்தில் அறிமுக நடிகர் டாக்டர் ராம், தேஜாஸ்ரீ, முமைத்கான், லிவிங்ஸ்டன், ஆர்த்தி கெய்தான், பல்லவி, விஜய்பாபு, மகாநதி சங்கர், தியாகு, முத்துக்காளை உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.புதுமுக இசையமைப்பாளர் முத்துராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் போலீஸ் லாக்கப்பில் நாயகன் ராமை நிர்வாணமாக அடைத்து வைத்து உதைப்பது போன்ற காட்சி இடம்பெறுகிறது. இதற்கான சூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஸ்டில்கள்தான் சர்ச்சையை கிளப்பியுள்ளன. போலீஸ் லாக்கப்பில் கைதியை நிர்வாணமாக வைத்து அடித்து துன்புறுத்தும் காட்சி என்பது முதல் பிரச்னை, நிர்வாணம் இரண்டாவது பிரச்னை என்று பிரச்னைகள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார் படத்தின் இயக்குனர்.

2 comments:

Samuthra Senthil said...

இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே..!

நல்லதந்தி said...

இதே கண்டி ஒரு ஃபிகர் படத்தை போட்டிருந்தியன்னாக்கா நல்லா கீதுன்னு சொல்லிட்டிருப்பேன்!.ரொம்ப கொடுமையா கீது மாமே! :)

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!