ஜெகன் மோகினி படத்தின் சூட்டிங்கில் முத்துக்குளியல் காட்சியில் நடிகை நமீதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சூட்டிங் ஸ்பாட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான என்.கே.விஸ்வநாதன் இயக்கி வரும் படம் ஜெகன் மோகினி. இந்த படத்தில் புதுமுக நடிகர் ராஜா ஹீரோவாக நடிக்க, நடிகைகள் நமீதா, நிலா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். படத்தின் கதைப்படி நமீதா முத்துக் குளிப்பது போன்ற காட்சி இருக்கிறது. இந்த காட்சிக்காக கடலுக்கு அடியில் நமீதா முத்துக்குளிக்க நமீதாவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் முத்துக்குளிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக மும்பையில் இருந்து சிறப்பு கேமரா கொண்டு வரப்பட்டது. கடலுக்கு அடியில் காட்சிகளை படமாக்கிய போது எதிர்பாராத விதமாக நமீதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை சைகை மூலம் நமீதா தெரிவித்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த இயக்குனர் மற்றும் படக்குழுவினர் நமீதாவை வேக வேகமாக கரையேற்றினார்கள். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரம் ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் அதே காட்சியில் நமீதா நடித்தார்.
இதுபற்றி படத்தின் இயக்குனர் கூறுகையில், நமீதாவுக்கு முத்துக்குளிக்க சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பயிற்சி எடுத்த சில நாட்களிலேயே கடலுக்குள் முத்துக் குளித்ததால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கொஞ்ச நேரம் யூனிட்டே பரபரப்பாகி விட்டது. படத்தின் கதைப்படி முத்துக்குளிக்கும் நமீதாவை நாயகன் ராஜா பார்த்து மயங்குவார். நமீதாவின் கிளாமரை பார்த்து ரசிகர்கள் கிறங்குவார்கள் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
2008-08-21
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
நமீதாவை இந்த நிலைமையில் பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு தான் மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கும் :-)))))))))
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!