2008-08-20
மீண்டும் வருகிறார் சித்தாரா
நடிகை சித்தாராவை அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விட முடியாது. தனது 90களில் தெற்றுப்பல் தெரிய சிரிந்து ரசிகர்களின் உள்ளத்தில் குடியேறியவர். புதுவசந்தம் படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் இவர். வயதாகி விட்டதாலும், வாய்ப்புகள் குறைந்ததாலும் சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று செட்டிலான சித்தாரா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவிருக்கிறார்.
உயிர், மிருகம் படங்களை இயக்கிய டைரக்டர் சாமி அடுத்து இயக்கவிருக்கும் சரித்திரம் படத்தில் ராஜ்கிரணுக்கு முக்கிய கேரக்டர். ராஜ்கிரணுக்கு ஜோடியாகத்தான் நடிகை சித்தாரா நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பவர் மிருகம் ஆதி. அவருக்கு ஜோடியாக நடிகை தேவிகாஸ்ரீ நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
cine news
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!