CINEMA NIRUBAR WELCOMES YOU

2011-08-21

மங்காத்தாவுக்கு சிக்கல்! ஒதுங்கிக் கொண்ட அஜித்!!

மங்காத்தா பட ரீலிஸில் திடீர் சிக்கல் எழுந்துள்ளது. அந்த சிக்கலில் தலையிடாமல் அதில் இருந்து படத்தின் ஹீரோ நடிகர் அஜித் ஒதுங்கிக் கொண்டாராம். டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் மங்காத்தா. நடிகர் அஜித் & நடிகை த்ரிஷா நாயகன் & நாயகியாக நடித்திருக்கம் இப்படம் வரும் 30ம்தேதி ரீலிஸ் ஆகவிருப்பதாக படத்தின் டைரக்டர் வெங்கட்பிரபு ஏற்கனவே அறிவித்துள்ளார். மங்காத்தா ரீலிசுக்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், படத்தை வெளியிட திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மங்காத்தாவை மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான கிளவுட் நைன் மூவிஸ் நிறுவனம்தான் தயாரித்திருக்கிறது. இந்நிறுவனம் இதற்கு முன்பு தயாரித்த வ குவாட்டர் கட்டிங், அழகர்சாமியின் குதிரை ஆகிய படங்கள் வெற்றி பெறாததால் தியேட்டர் அதிபர்கள் பெரும் நஷ்டத்துக்கு ஆனாளார்களாம். பாதிக்கப்பட்ட தியேட்டர் அதிபர்கள்தான் இப்போது மங்காத்தாவுக்கு போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். முந்தைய படங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டாமல், புதிய படத்தை ரீலிஸ் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று, தியேட்டர் அதிபர்கள் சங்கம் கிடுக்கிப் பிடி போட்டிருக்கிறது.

இதனை சற்றும் எதிர்பாராத தயாரிப்பு தரப்பு, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறதாம். அதேநேரம் தல அஜித்தோ... படத்தை முடித்துக் கொடுத்ததோடு தன் கடமை முடிந்து விட்டது. அதற்கு பிறகு அது தயாரிப்பாளர் பாடு, விநியோகஸ்தர்கள் பாடு என்று ஒதுங்கிக் கொண்டாராம்.

2011-08-19

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல! - வெங்கட்பிரபு

மங்காத்தா படத்தின் கதை அஜித்துக்காக உருவாக்கப்பட்டது அல்ல என்று அப்பபடத்தின் டைரக்டர் வெங்கட்பிரபு கூறியுள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் & த்ரிஷா நடித்திருக்கும் மங்காத்தா படம் வரும் 30ம்தேதி ரீலிஸ் ஆகவிருக்கிறது. ரசிகர்களில் ஏகேபித்த எதிர்பார்ப்புடன் திரைக்கு வரவிருக்கும் இப்படம் குறித்து தினம் தினம் புதுப்புது தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் மங்காத்தா உருவான கதை பற்றி டைரக்டர் வெங்கட்பிரபு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மங்காத்தா படத்தின் கதை அஜித்துக்கா உருவாக்கப்பட்டது இல்லை. படத்தில் வரும் விநாயக் கேரக்டர் விவேக் ஒபராய்க்காக உருவாக்கப்பட்டது. முதலில் இந்தக் கதையில் விவேக் ஒபராய்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படம் பற்றி அவரிடம் பேசவில்லை. அப்போதுதான் அஜித்திடம் இருந்து ஒரு போன் வந்தது. "அடுத்த படத்துக்கு "மங்காத்தா' என்று பெயர் வைத்துள்ளதாக கேள்விப்பட்டேன். நல்ல பெயர். வாழ்த்துகள்'' என்றார். "ஹாலிவுட்டில் பிரபலமான "தி டார்க் நைட்' படத்தில் வரும் ஹெத் லெட்ஜர் கேரக்டரில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். அது போல் ஒரு கதை செய்ய முடியுமா? என அஜித் என்னிடம் கேட்டார். மங்காத்தா அது போன்ற ஒரு கதைதான் என்று சொல்லி கதையின் கருவை சொன்னேன். அவருக்கு பிடித்து விட்டது. "சூப்பர் நானே நடிக்கிறேன் என்று கூறி விட்டார். இது மூன்றே நிமிடங்களில் நடந்த விஷயம். இதுதான் அஜித்தின் "மங்காத்தா' உருவான கதை, என்று கூறியிருக்கிறார்.

சிம்பு என்றைக்குமே என் நண்பரல்ல! ஜீவா பேட்டி!!

கோ படத்தில் வாய்ப்பை இழந்த நடிகர் சிம்புவுக்கும், நல்ல வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கும் நடிகர் ஜீவாவுக்கும் இடையே புகைச்சல் இருந்து வருகிறது. நடிகர் சிம்பு நேரடியாகவும், மறைமுகமாகவும் கோ படத்தையும், நடிகர் ஜீவாவையும் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜீவா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சிம்பு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், சிலம்பரசன் என்றைக்குமே எனக்கு நண்பராக இருந்ததில்லை. யாராக இருந்தாலும் நேரடியாக சவால் விட்டு மோதுவது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். அதை வரவேற்கலாம். ஆனால், பின்னால் மறைந்திருந்து குத்துவது ஆரோக்கியமான போட்டி அல்ல, என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், கோ படத்தை அடுத்து நான் நடித்து திரைக்கு வந்துள்ள ரவுத்திரம் படமும் 70 சதவீதம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து நான் நடித்து திரைக்கு வர இருக்கும் படம், `வந்தான் வென்றான்.' இந்த படம் அடுத்த மாதம் (செப்டம்பர்) திரைக்கு வரும். அதையடுத்து கவுதம் மேனன் டைரக்ஷனில் ஒரு படத்திலும், மிஷ்கின் டைரக்ஷனில், `முகமூடி' என்ற படத்திலும் நடிக்கிறேன். இந்த படங்களை அடுத்து, டைரக்டர் ஜனநாதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளேன், என்றார்.