
நடிகை சிம்ரன் தனது சம்பளத்தை உயர்த்தி விட்டார். கல்யாணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று சபதமேற்று சென்ற நடிகை சிம்ரன், குழந்ததை பிறந்த பின்னர் மீண்டும் கோலிவுட் பக்கம் திரும்பி வந்திருக்கிறார். சின்னத்திரையில் நுழைந்து, பின்னர் பெரிய திரைக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் சிம்ரன் இப்போது சேவல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். முதலில் நாளன்றுக்கு ரூ.50 ஆயிரம் சம்பளம் தந்தால் போதும் என்று கூறி வந்த சிம்ரன், இப்போது ரூ.1 லட்சம் வேண்டும் என்று கேட்கிறாராம். காமெடி நடிகர்களைப் போல தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும் என்று சொல்லும் சிம்ரன் மொத்தமாக 10 லகரங்களை வாங்கிய பின்னரே சூட்டிங்கிற்கு வர சம்மதிக்கிறாராம்.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!