சீயான் விக்ரமுடன் ஜெமினி படத்தில் ஓ.. போடு... பாடலுக்கு குத்தாட்டம் போட்டு தமிழ் ரசிகர்களையே குலுக்கி எடுத்தவர் நடிகை ராணி. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு தமிழ் சினிமாவில் குத்தாட்டம் போட்டுள்ளார்.
டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி வரும் படம் பந்தயம். இந்த படத்தின் நாயகனாக நிதின் சத்யா, நாயகியாக சிந்து துலானி நடித்து வருகிறார்கள். படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு ஓ போடு.. ராணி கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். இதற்காக இலங்கையின் புகழ்பெற்ற பாப் பாடல் ஒன்று ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலில் சிந்து துலானியும் ராணியுடன் போட்டி போட்டு ஆடியிருக்கிறாராம். படம் வெளியான பிறகு இந்த பாடலுக்கும் ரசிகர்கள் ஓ போடுவார்கள் என்கிறார் டைரக்டர் எஸ்.ஏ.சி.
2008-08-10
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே..!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!