பேரழகன், வேல் படங்களில் இரண்டு வேடங்களில் நடித்து அசத்திய நடிகர் சூர்யா அடுத்து ஒரு படத்தில் 3 வேடங்களை போடவுள்ளார். டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார்தான் அந்த படத்தை இயக்கவிருக்கிறாராம்.
டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் தற்போது சரத்குமார் இரட்டை வேடத்தில் நடிக்கும் ஜக்குபாய் படத்தை இயக்கி வருகிறார். (இந்த படத்தின் கதை முதலில் ரஜினிக்காக எழுதப்பட்டது). இந்த படத்தை தொடர்ந்து அவர் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். அந்த படத்தில்தான் சூர்யாவுக்கு 3 வேடம் கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம். இதற்கான கதை டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சூர்யாவின் மூன்று கெட்டப்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததுபோல இருக்குமாம்.
2008-08-17
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!