2008-08-17
கமல்ஹாசனின் அதிரடி நடவடிக்கை
கமல்ஹாசன் ரசிகர் நற்பணி மன்றத்தின் தமிழ்நாடு மாநில நிர்வாகியாக செயல்பட்டு வந்த குனசீலன் உள்ளிட்ட 3 பேரை பொறுப்பில் இருந்து நீக்கி நடிகர் கமல்ஹாசன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழக கமல்ஹாசன் நற்பணி இயக்க நிர்வாகியாக வேலை செய்து வந்த ர.குணசீலன். தென்சென்னை மாவட்ட பொறுப்பாளர் டி.ஜான் மற்றும் நாமக்கல் மாவட்ட செயலாளர் ஏ.ராஜூ ஆகியோர்கள் அப்பொறுப்பிலிருந்து 13-08-2008 புதன்கிழமை முதல் நீக்கப்படுகிறார்கள்.
மேற்கொண்டு மாவட்ட, நகர, கிளை இயக்கச் சகோதரர்கள், அவர்களிடம் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளவேண்டாம் என்றும், புதிய நிர்வாகி நியமிக்கும் வரை எப்பொழுதும் போல் நமது நற்பணிகளை தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கமலின் எண்ணத்திற்கு எதிர் நோக்கில் சென்றுகொண்டிருப்பதாக மாநில நிர்வாகி குணசீலன் மீது புகார் வந்துள்ளதாம். மன்ற பணிகளை சரிவர செய்யாமலும், மன்றத்தின் செயல்பாடு மற்றும் உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை கமலிடம் சரியான நேரத்தில் கொண்டுபோய் சேர்க்க தவறிவிட்டதாகவும் குணசீலன் மீது மன்றத்தின் பிற நிர்வாகிகள் குறைபட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கமல் நற்பணி இயக்க நிர்வாகி பொறுப்பிலிருந்து குணசீலன் நீக்கப்படுவதாக கமல் அறிவித்துள்ளார் என்கிறார்கள்.
Labels:
kamalhasan
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!