2008-08-26
ஜாக்கிசானுடன் நடிக்கிறாரா அசின்?
மும்பையை சுற்றி வரும் திரையுலக வதந்திகளில் இது புதிது? நடிகர் ஜாக்கிசானுடன் நடிகை அசின் நடிக்கப்போகிறார் என்பதுதான் அந்த வதந்தி. உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்று தனது விளம்பரத்தில் நடிக்க ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஜாக்கிசானை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விளம்பர படத்தில் ஜாக்கிசானுடன் நடிக்கப்போகும் நடிகை யார் என்ற கேள்வி கடந்த சில வாரங்களாக எழுந்து வரும் நிலையில், அசின்தான் ஜாக்கியுடன் நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் உருவான இந்த செய்தி மல்லுவுட் பக்கம் சென்றதால், கேரள பத்திரிகைகள் வரிந்து கட்டிக் கொண்டு எழுதித் தள்ளின. இதனை கேள்விப்பட்ட அசின், ஜாக்கியுடன் நடிப்பது பற்றிய செய்தி உண்மை இல்லை என்று கேரள பத்திரிகைகளை தொடர்பு கொண்டு சொல்லியிருக்கிறார். அப்படி நான் அவருடன் நடித்தால் அதைவிட பெருமை வேறு எதுவும் இல்லை என்றும் அசின் கூறியிருக்கிறாராம்.
Labels:
asin
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!