குசேலன் படத்தில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று நடிகை மீனா புலம்பிக்கொண்டிருக்கிறார் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையிலேயே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதில் மீனாவுக்கு வருத்தம் இல்லையாம். அவருடைய வருத்தம் எல்லாமே நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுதானாம்.
சமீபத்தில் மீனா அளித்துள்ள ஒரு பேட்டி இதனை தெளிவுபடுத்தியிருக்கிறது. அந்த பேட்டியில் மீனா, குசேலன் படத்தில் நானும், பசுபதியும் நடித்த உருக்கமான சில காட்சிகளை நீக்கி விட்டு தேவையில்லாமல் நயன்தாரா வரும் காட்சிகளை சேர்த்துள்ளனர். இது எனக்கு மன கஷ்டத்தை தருகிறது. கதைப்படி நயன்தாரா ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்திருக்க வேண்டும். ஆனால் அவரை மிகைப்படுத்தி காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக மழையில் ஆடும் சோலோ பாட்டெல்லாம் தேவையா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. குலேனனில் என்னை புறக்கணித்து விட்டு நயன்தாராவை அதிகமாக காட்டியிருக்கிறார்கள். படத்தின் டைட்டில் கார்டிலும் நயன்தாரா பெயர்தான் முதலில் வருகிறது. இதை பார்க்கும்போது அதிர்ச்சியாக இருந்தது, என்று கூறியிருக்கிறார்.
இதில் இருந்தே மீனாவுக்கு கோபம் குசேலன் படம் மீதா, இல்லை நயன்தாரா மீதா? என்பதை தெரிந்து கொள்ளலாம் என்கிறார்கள் விவரமறிந்த கோடம்பாக்கத்துக்காரர்கள்.
2008-08-15
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
மீனா இப்படி சொல்லி வர சான்ஸ் ம் வராம போய்ட போகுது..
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!