அசின் என்ற பெயருக்கு அதிர்ஷ்டம் என்று அர்த்தமாம். அதனால்தானோ என்னவோ அவர் அதிர்ஷ்ட தேவதையாகவே கோலிவுட்டை வலம் வந்து இப்போது பாலிவுட்டில் மையம் கொண்டிருக்கிறார்.
கோலிவுட்டில் நடித்தபோது விஜய்யுடன் நடித்த போக்கிரி செம ஹிட் ஆனது. இதற்கு அசினின் அதிர்ஷ்டம்தான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. அடுத்து நீண்ட காலமாக ப்ளாக் பஸ்டர் படங்களை தராமல் இருந்த கமலின் கமர்ஷியல் வேல்யூவை புதுப்பித்த தசாவதாரம் வெளியான முதல் வாரத்திலேயே ரூ.60 கோடி வசூலை வாரி குவித்தது. இந்த படத்திலும் அசின்தான் நாயகி.
அதன் பின்னர் பாலிவுட் பக்கம் போன அசினை அதிர்ஷ்ட தேவதை பட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தி கஜினி ரூ.90 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. அடுத்து அவர் நடிக்கவுள்ள லண்டன் ட்ரீம்ஸ் ரூ.120 கோடிக்கு விற்றுள்ளது. இதனால் இந்த அதிர்ஷ்டக்கார தேவதையை கோலிவுட் பக்கம் இழுத்து வர பல முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் அம்மணிதான் நான் ரொம்ப பிஸி என்று கூறி மறுத்து வருகிறாராம்.
2008-08-25
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
எல்லா நிருபர்களும் அசின் புகழ் பாடும் ரகசியம் தான் என்ன ?
போக்கிரி படத்தின் கூடவே தான் அஜித்தின் ஆழ்வார் என்ற தோல்விபடமும் வெளியாகியது!
போக்கிரி வெற்றிப்படமா என்ன ?
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!