2008-08-13
வடிவேலுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.8 லட்சம்
காமெடி நடிகர் வடிவேலுக்கு ஒரு நாள் சம்பளம் எட்டு லட்சம் ரூபாய். காமெடி இல்லீங்க...! உண்மைதான்.
நிருபர் வலைப்பூவில் ஏற்கனவே நடிகர்களின் சம்பள பட்டியல் மற்றும் நடிகைகளின் சம்பள பட்டியலை தனித்தனியாக வெளியிட்டிருந்தோம். இதோ உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்கள் வாங்கும் சம்பள விவரம்:
நடிகர், நடிகைகளைப் பொறுத்தவரை ஒரு படத்துக்கு இவ்வளவு சம்பளம் என்று ஒப்பந்தமாவார்கள். ஆனால் காமெடி நடிகர்கள் ஒரு நாளைக்கு இவ்வளவு என்று சம்பளத்தை நிர்ணயிக்கிறார்கள். எந்த வகையில் இன்றைய தேதியில் முன்னணியில் இருப்பவர் நடிகர் வைகைப்புயல் வடிவேலு. அவர் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 8 லட்சம் ரூபாய். வாயை பிளக்காதீர்கள் நண்பர்களே...! இது காமெடி இல்லை. நிஜம்தான். வடிவேலுக்கு அடுத்தபடியாக காமெடியில் அதிக சம்பளம் வாங்குபவராக இருப்பவர் சின்னக் கலைவாணர் விவேக். அவர் ஒரு படத்துக்கு ரூ.3 முதல் 4 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார். சந்தானம், கஞ்சா கருப்பு ஆகியோர் ரூ.1 லட்சம் வரை சம்பளம் கேட்கிறார்கள். கவுண்டமணி, செந்தில் இப்போது படங்களில் நடிப்பதில்லை. அவர்கள் கரகாட்டக்காரன் போன்ற காமெடியால் ஹிட் ஆன படங்களில் வாங்கிய சம்பளம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரைதான்.
வில்லன் நடிகர் ஒருவர் ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வாங்குகிறார். அவர் யார் என்பது இன்னும் இரு தினங்களில் நிருபர் வலைப்பூவில் இடம்பெறும்.
Labels:
Actors Salary List,
vadivelu
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே..!
ஸ்ஸ்ஸூ அப்பா ! இப்பவே கண்ணை கட்டுதே
Any news on the sexual harassment case by Nameetha, on vadivelu?
செய்திகளுக்கு நன்றி, அந்த வில்லன் நடிகர் பிரகாஸ்ராஜ் என்று நான் நினைக்கிறேன்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!