தேவா படத்தில் விஜய்யுடன் ஜோடியாக அறிமுகம் ஆனவர் நடிகை சுவாதி. தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு பக்கம் போனார். அங்கேயும் அவருக்கு வாய்ப்புகள் வாசல் கதவை தட்டவில்லை. இதனால் சினிமாத்துறையை விட்டு சிலகாலம் விலகியிருந்த சுவாதிக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து, திருமணத்துக்கு நிச்சயம் செய்துள்ளனர்.சுவாதிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை துபாயில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்து வருகிறார். பெயர் ஸ்ரீகாந்த். வரும் 27ம் தேதி திருப்பதி கோயிலில் வைத்து இவர்களது திருமணம் நடக்கிறது. முன்னதாக 26ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி அங்குள்ள நட்சத்திர ஒட்டலில் நடைபெறவுள்ளது. திருமணத்தில் பங்கேற்க தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.






0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!