2008-08-14
அசினை மீண்டும் தமிழுக்கு இழுத்து வர ஏற்பாடு
கோலிவுட்டின் நம்பர் ஒன் நாயகியாக இருந்த அசின், இப்போது பாலிவுட்டில் ரொம்ப பிஸி. கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிப்பதற்காக மும்பை பக்கம் போன அசினை, பாலிவுட் வளைத்து போட்டு விட்டது.
இந்தி கஜினிக்கு பிறகு அசின் நடிக்கவுள்ள படம் லண்டன் ட்ரீம்ஸ். இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் எடுக்கப்படுகிறது. இதற்காக விரைவில் அசின் லண்டன் செல்லவிருக்கிறார். தொடர்ந்து 50 நாட்கள் வரை அங்கு சூட்டிங் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அசினை தமிழுக்கு இழுத்து வரும் முயற்சியில் இயக்குனர் தரணியில் உதவியாளர் பாபுசிவன் ஈடுபட்டுள்ளார். அவர் இயக்கவிருக்கும் படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அசினை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டும் என்பதே பாபு சிவனின் விருப்பமாம்.
Labels:
asin
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே..!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!