Actress Divya padmini
புதுமுக நடிகை ஒருவரின் தாவணியில் தீ பிடித்தது. இதனால் சூட்டிங் ஸ்பாட்டில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.காமெடி நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் படம்அய்யன். டைரக்டர் கேந்திரன் முனுசாமி இயக்கும் இந்த படத்தில் வாசனுக்கு ஜோடியாக புதுமுக நடிகை திவ்யா பத்மினி என்பவர் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் தற்போது பரமக்குடி பகுதியில் நடந்து வருகிறது. கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் செங்கல்சூளை தீயில் நாயகி திவ்யா சிக்கிக் கொள்வது போலவும், அவரை நாயகன் வாசன் காப்பாற்றுவது போலவும் ஒரு காட்சி இடம்பெறுகிறது.
இக்காட்சிக்கான சூட்டிங் நடந்தபோது எதிர்பாராதவிதமாக நாயகி திவ்யா பத்மினியின் தாவணியில் உண்மையிலேயே தீ பிடித்தது. இதனால் பயந்து போன திவ்யா அலறினார். பின்னர் படப்பிடிப்பு குழுவினர் திவ்யா மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் திவ்யாவின் கால்களில் லேசான தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை டாக்டரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. சூட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ளது.
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே..!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!