நடிகை சந்தியா பங்கேற்ற படத்தின் சூட்டிங்கில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நடிக சங்கீதாவின் தம்பி பரணி தயாரிப்பில், இன்னொரு தம்பி பரிமள் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ஓடிப்போலாமா. டைரக்டர் கண்மணி இயக்கும் இந்த படத்தின் சூட்டிங் கடந்த சில நாட்களாக ஊட்டியில் நடந்து வருகிறது. கதைப்படி ஒரு காட்சியில் சந்தியாவை காப்பாற்றுவதற்காக வில்லன்களுடன் நாயகன் பரிமள் சண்டை போடுவார். அந்த காட்சிக்கான சூட்டிங் நஞ்சன்காடு பகுதியில் படமாக்கப்பட்டது.
சண்டைக்காட்சியை எடுத்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக பலத்த மழை பெய்தது. இதனால் சூட்டிங்கை நிறுத்தி விட்டு பேக்கப் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள் சாய்ந்தன. சந்தியா நின்ற பகுதியை நோக்கி ஒரு மரம் சாய்ந்ததால் அவர் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இந்த சம்பவத்தால் ரொம்பவே பயந்து விட்டதாக சந்தியா தெரிவித்துள்ளார்.
2008-08-25
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!