Raninikanth and Nayanthara in Kuselan Movie
குசேலன் படம் எதிர்பார்த்த அளவு கலெக்ஷனை கொடுக்காததால் தியேட்டர் அதிபர்கள் மன கஷ்டத்தில் இருக்கிறார்கள். இந்த பிரச்னைக்கு ரஜினி வந்தபிறகே தீர்வு காணப்படும் என்று பிரமிட் சாய்மீரா நிறுவனம் தெரிவித்துள்ளது.குசேலன் படம் ரீலிஸ் ஆவதற்கு சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் நடந்த பிரச்னைகளை தொடர்ந்து ரஜினிகாந்த் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டார். பின்னர் மன்னிப்பு கேட்கவில்லை என்பதை தெளிவு படுத்தினார். ரஜினிகாந்த் மாற்றி மாற்றி ஸ்டேட்மென்ட் விட்டதால் ரசிகர்கள் குசேலனை பார்க்க வரவில்லை. இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று குசேலன் படத்தை திரையிட்டுள்ள தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நஷ்டத்தை ஈடு செய்யுமாறும் பிரமிட் சாய்மீரா நிறுவனத்திடம் கோரி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் ரோபோ சூட்டிங்கில் இருக்கும் ரஜினிகாந்த் சென்னை திரும்பிய பிறகே இவ்விவகாரத்தில் முடிவு எடுக்கவிருப்பதாக பிரமிட் சாய்மீரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் பிரமிட் நிறுவனம், குசேலன் படத்தின் தயாரிப்பாளர்களிடம் முறையிட்டதாகவும், ஆனால் தயாரிப்பு தரப்பு கை விரித்து விட்டதாகவும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே..!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!