2008-08-27
லோ-ஹிப் புடவை கட்ட கூச்சப்பட்ட நடிகை
மார்டன் டிரஸ்களில் அசத்தி வரும் நடிகைகளை திடீரென லோ-&ஹிப் சேலை கட்டி நடிக்கச் சொன்னால் உண்மையிலேயே ரொம்ப சங்கடப்படுவார்கள். அப்படித்தான் இந்த நடிகையும் லோ-ஹிப் புடவை கட்ட ரொம்பவே சங்கடப்பட்டிருக்கிறார்.
உயிர் படத்தில் கொழுந்தன் மீது ஆசைப்படும் அண்ணி கேரக்டரில் வெளுத்து கட்டியிருந்த சங்கீதா, தற்போது நடித்துள்ள படம் தனம். இப்படத்தில் தனம் என்கிற தாசி வேடத்தில் நடித்திருக்கிறார் சங்கீதா. இவர் இப்படத்தில் ஆரம்பத்தில் நடிக்கக் கூச்சப்பட்டாராம். அதன்பிறகு, கதையின் வலிமையையும் தனது வேடத்தின் தன்மையையும் புரிந்துகொண்டு தன்னை மறந்து அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து, கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். படத்தில் லோ-ஹிப் புடவை கட்டிக்கொண்டு சற்று கவர்ச்சியாக நடிக்க வேண்டிய காட்சிகளில் நடிக்க சங்கடப்பட்டார் சங்கீதா. மேலும், காட்சிகள் படமாக்கப்பட்ட போது வேடிக்கை பார்க்கக் கூடியிருந்த ரசிகர்களும் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்த, மக்கள் கூட்டத்தை திரைப்போட்டு மறைத்துப் படமாக்கி இருக்கிறார் டைரக்டர் ஜி.சிவா.
படத்தின் சில பகுதிகள் ஹைதராபாத்தில் காந்தி நகர் பகுதியில் நடப்பதுபோல் இருக்கிறது. அதற்காக மார்க்கெட், கோவில், பேருந்து நிலையம் போன்ற இடங்களை உள்ளடக்கிய ஒரு பகுதியை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் முப்பது லட்சம் செலவில் கலை இயக்குனர் தோட்டாதரணி வடிவமைத்த செட்டில் படமாக்கியுள்ளனர் என்பது கொசுறு தகவல்.
Labels:
sangeetha
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!