2008-08-23
ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர்
நிருபர் வலைப்பூவில் ஏற்கனவே நடிகர்கள், நடிகைகள், காமெடி நடிகர்களின் சம்பள பட்டியலை வெளியிட்டுள்ளோம். இதனை ஆயிரக்கணக்கான வாசக நண்பர்கள் படித்துச் சென்றுள்ளனர்.
நடிகர் நடிகைகள், காமெடி நடிகர்களின் சம்பளத்தை தெரிந்து கொண்ட நீங்கள் வில்லன் நடிகர்களின் சம்பளத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? வில்லன் நடிகர்களைப் பொறுத்த வரை நாள் கணக்கில்தான் சம்பளம் பெறுவார்கள்.
அந்த வரிசையில் அதிக அளவு சம்பளம் வாங்குபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வாங்குகிறார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனது வில்லத்தனத்துக்கு இருக்கு வரவேற்பை புரிந்து கொண்ட இவர் ரூ.10 லட்சத்துக்கு ஒரு பைசா குறைவு என்றாலும் நடிக்க மறுத்து விடுகிறார். இவருக்கு அடுத்தபடியாக சொல்லிக்கொள்ளும்படியாக எந்த வில்லனும் இல்லை. ஆஷிஷ் வித்யார்த்தி, சுமன் உள்ளிட்டவர்கள் நாளன்றுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வாங்குகிறார்கள். மணிவன்னன் ரூ.1 லட்சம் வரை சம்பளம் கேட்கிறார்.
நடிகர்கள் சம்பள பட்டியல் : முழு விவரம்
நடிகைகள் சம்பள பட்டியல் : முழு விவரம்
ஒரு நாளைக்கு ரூ.8 லட்சம் சம்பளம் வாங்கும் காமெடி நடிகர்
Labels:
Actors Salary List,
prakash raj
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!