2008-08-31
தசாவதாரத்தை முந்தியது ரித்தீஷின் நாயகன்!
சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் தசாவதாரத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ரித்தீஷின் நாயகன் முந்தியுள்ளது. இது திரையுலகையே ஆச்சர்யமடைய வைத்துள்ளது. வசூலில் தொடர்ந்து முதலிடத்தில் விஷாலின் சத்யம், இரண்டாமிடத்தில் குலேசன் ஆகியவை நீடித்து வருகின்றன. கமலஹாசனின் தசாவதாரத்தை நான்காவது இடத்திற்கு தள்ளி, மூன்றாமிடத்தை பிடித்துள்ளது ஜே.கே.ரித்தீஷின் நாயகன். சென்ற வார இறுதி வசூலில் ரூ.24 லட்சங்கள் வசூலித்து, தொடர்ந்து சத்யம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சென்னையில் இதன் மொத்த வசூல் ரூ.1.06 கோடி. குசேலனின் வார இறுதி வசூல் ஏறக்குறையை ரூ.20.5 லட்சங்கள். இதுவரையான மொத்த வசூல் ரூ.3.62 கோடி.ரஜினி படங்களில் இது மிகமிக குறைவான வசூல் என்பது கவனத்துக்குரியது. நாயகன் எட்டு லட்சத்து இருபத்தி ஏழாயிரம் ரூபாயுடன் மூன்றாமிடத்தை பிடித்துள்ளது. இது படத்தின் மூன்று நாள் வசூல் என்பது ஆச்சரியம். சென்னையில் மொத்த வசூல் ரூ.10.68 கோடியுடன் நான்காமிடத்தில் உள்ளது தசாவதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
Rithish
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!