எம்.பி.பி.எஸ். மாணவி ஒருவர் சினிமா ஆசையால் நடிகை அவதாரம் எடுத்திருக்கிறார்.
எஸ்.பி.பி. சரண் தயாரிக்கும் குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் புதுமுக நாயகி தர்ஷனா. இவர் எம்.பி.பி.எஸ். மாணவியாம். படிப்பை விட்டுட்டு, நடிக்க வந்துட்டீங்களா? என்று தர்ஷனாவிடம் கேட்டால், சினிமா மேல இருந்த ஆசையால நடிக்க வந்திருக்கேன். அதுக்காக படிப்பை விட முடியுமா? சூட்டிங் நடக்குற நாட்கள்ல ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி நடிச்சிட்டிருக்கேன், என்றார்.
எஸ்.பி.பி. சரண் கூறுகையில், குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் படத்தில் நடிப்பதற்காக புதுமுக நடிகைகளை தேடிக்கிட்டு இருந்தோம். நிறைய புதுமுகங்கள் அப்ளை பண்ணிருந்தாங்க. அப்படி அப்ளை பண்ணினவருதான் தர்ஷனா. அவரை நடித்து காட்ட சொன்னோம். நல்லா நடித்தார். படத்தின் டைரக்டர் ராஜமோகனுக்கும் பிடிச்சிருந்தது. அதனால் தர்ஷனாவையே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து விட்டோம், என்றார்.
2008-08-12
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே..!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!