சுப்பிரமணியபுரம் படத்துக்கு பிறகு நடிகர் ஜெய், ஒப்பந்தமாகியுள்ள படம் அவள் பெயர் தமிழரசி. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை நவ்யா நாயரிடம் கால்ஷீட் கேட்டிருந்தார்கள். அம்மணியும், சுப்பிரமணியபுரம் படம் ஹிட் ஆனதால் நாயகன் ஜெய்யுடன் ஜோடி போட தயார் என்று டபுள் ஓ.கே. சொல்லியிருந்தார்.
இந்நிலையில் நவ்யா நாயருடன் ஜோடியாக நடிக்க நடிகர் ஜெய் மறுத்து விட்டாராம். நவ்யா நாயருடன் நான் நடித்தால் ஜோடிபோல தெரியாது. அக்காள், தம்பி போலதான் தெரியும். ஹீரோயினை மாற்றினால்தான் இந்தபடத்தில் நடிப்பேன் என்று கூறி விட்டாராம். ஒரு படம் ஹிட் ஆனதுக்கே இப்படியரு அலம்பலா என்று ஒருசிலர் புலம்ப... ஜெய்யின் ஆதங்கம் நியாயமானதுதானே.. என்று இன்னொரு பிரிவினர் கூறி வருகிறார்கள்.
பாவம் நவ்யா நாயர். படத்தில் இருந்து கழற்றி விடப்பட்டு விட்டார்.
2008-08-17
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!