2008-08-31
பிகினி உடை தரிசனத்துக்கு நயன்தாரா தரும் ஐடியா : ஸ்பெஷல் பேட்டி
ஐயா படத்தில் பாவாடை, தாவணியுடன் அறிமுகமாகி, சந்திரமுகியில் சேலை கட்டி, பில்லாவில் நீச்சல் உடையணிந்து முன்னேறிக் கொண்டிருக்கும் நயன்தாரா இன்று குசேலன் படத்தில் கவர்ச்சி நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு வெளுத்து கட்டியுள்ளார். சத்யம் படத்தில் சென்சாரின் கத்தரிக்கு பலியான காட்சிகளைத் தவிர வெட்டுபடாமல் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சிகளும் நயன்தாராவின் தாராள மனசுக்கு உதாரணம். பாவாடை தாவணியில் நடித்த நயன்தாரா, நீச்சல் உடையில் நடித்ததால் ரசிகர்களுக்கு சந்தோஷம். அதே நேரத்தில் இதுபற்றி அவர் என்ன நினைக்கிறார். அவரிடமே கேட்டோம். இதோ நயன்தாராவின் பேட்டி... உங்களுக்காக...!
பில்லா படத்தில் டூ-பீஸ் பிகினி டிரெஸ்ஸில் வந்தது பற்றி...?
இதே கேள்விக்கு இன்னும் எத்தனை தடவைதான் பதில் சொல்லப்போகிறேனோ தெரியவில்லை. படம் ரிலீசாகி கொஞ்சநாள் வரை இதை புகாராகவே நிறைய பேர் கூறி வந்தார்கள். ஆனால் எனது அந்த தோற்றம் நிறைய பாராட்டுதலையும் பெற்றுத் தந்தது. டூ-பீஸ் நீச்சல் உடையில் நடிப்பது பற்றி எனக்கு எந்தவிதமான தர்மசங்கடமும் எழவில்லை. காரணம் அதில் நான் பொருத்தமாகவும், அழகாகவும் இருப்பேன் என்பதில் எனக்கு சந்தேகம் இருந்ததில்லை. இது பிகினி டிரெஸ்சுக்கு மட்டுமல்ல, பாவாடை, தாவணி, சேலை, ஜீன்ஸ்... வகையறாக்களில் வந்தாலும்கூட நாம் அதுக்கு பொருந்துவோம் என்ற தன்னம்பிக்கை எனக்கு இருக்கு. ஆனால் அதுக்கு பொருத்தமான உடல்வாகும் தேவை. அது எனக்கு இருப்பதாகவே நினைக்கிறேன். பில்லா' பட யூனிட்டினர், சங்கோஜமாக இருந்தால் சிங்கிள் பீஸ் நீச்சல் உடை அணிந்து கொள்ளலாம்' என்றுகூட என்னிடம் கூறியிருந்தார்கள். ஆனால் இது எனக்கு அழகாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் டூ-பீஸில் வந்தேன்.
அடுத்து ஏதாவது படத்தில் டூபீஸ் தரிசனம் கிடைக்குமா?
ஒரு தடவை செஞ்சாச்சு. அதை ரசிகர்களும் ரசித்து மகிழ்ந்தாச்சு. மீண்டும் மீண்டும் அதையே எல்லா படத்திலும் தொடர்ந்தால் அதில் என்ன சிறப்பு இருக்கப் போகிறது? படத்துக்குப் படம் புதுசான காட்சிகள், காஸ்ட்யூம்கள், பாடல்கள், டான்ஸ் மூவ்மெண்ட்ஸ், நடிப்பு என்று இருந்தால்தானே ரசிக்க முடியும்? அதுபோலதான் சில ஸ்பெஷல் தோற்றங்களும்! டூ-பீஸில் அதாவது பிகினியில் என்னை பார்க்கணும்னா பில்லாவை திரும்பத் திரும்ப பார்த்துக்கோங்க.
ஏகன் படம் பற்றி...?
ஏகன் படத்தோட டைரக்டர் டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம் அல்லவா? அப்புறம் டான்ஸ், டூயட் சூப்பரா இருக்காதா? ஏ.வி.எம். ஸ்டூடியோவில் பத்து செட்டிங்ஸ் போட்டிருக்காங்க. அதில் காலேஜ் கலாச்சார விழா, திடீரென கனவு லோகமாக மாறி அஜித்தும் நானும் டூயட் பாடுறோம். படத்துல காலேஜ் லெக்சரர் ரோல் என்னோடது. படத்தின் பெரும்பகுதி ஏற்காடில் உள்ள நிஜ பள்ளிக்கூடம் ஒன்றில் அதன் கோடைகால விடுமுறை காலத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் சுஹாசினி, சுமன், நவதீப், பியா (மும்பை மாடல்) ஆகியோரும் நடித்துள்ளனர். தீவிரவாதியாக அஜித் சூப்பர் கெட்-அப்பில் வருகிறார். படம் முழுக்க அமர்க்களமாக இருக்கும். ரொம்பவே என்ஜாய் பண்ணுவீங்க. யுவன்சங்கர் ராஜாவோட இசையும் சூப்பரா வந்திருக்கு.
குசேலன் படத்தில் மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேர்ந்தது பற்றி?
அது வெரி நைஸ் எக்ஸ்பீரியன்ஸ். ரஜினி சாருடன் இணைந்து நடித்துள்ள மூன்றாவது படம் குசேலன். படம் வெளியாகி நல்லா போய்கிட்டிருக்கு. ரொம்பவும் ஹேப்பியா இருக்கேன். ரஜினி சாரை பற்றி சொல்லணும்னா, அவருக்கும் எனக்கும் வயதில் நிறைய வித்தியாசம் இருக்கு என்றாலும், அவருடன் நடிக்கும்போது நான் அதை பொருட்படுத்துவதே இல்லை. சொல்லப்போனால் இப்போதுள்ள இளைஞர்களைவிட அவர் பல விஷயங்களில் இன்னும் இளமையுடனும், துள்ளலுடனும், உற்சாகத்துடனும்தான் இருக்கிறார். அதை நீங்கள் படத்தைப் பார்த்தால் புரிந்துகொள்வீர்கள்.
உங்களைப் பற்றி அடிக்கடி வதந்திகள் வருகின்றனவே?
நான் உண்டு என் வேலை உண்டுன்னு என் குடும்பத்தோடு அமைதியா வாழ்கிறேன். சிலர் தேவையில்லாமல் என்னைப் பற்றி முரண்பாடான விஷயங்களை செய்திகளாகச் சித்தரித்து என் மீது திணிக்கிறார்கள். அது எவ்வளவு காலம் எடுபடப் போகிறது? கொஞ்ச காலத்திற்கு பிறகு எனது வேலைகள்தான் பேசப்படும், இதுபோன்ற வதந்திகள் அல்ல!
இவ்வாறு நயன்தாரா கூறினார்.
Labels:
Nayanthara
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!