2008-08-29
அடுத்த படத்துக்கு அஜித் ரெடி
பில்லா வெற்றியைத் தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் ஏகன் படத்தில் நடித்து வருகிறார். டான்ஸ் மாஸ்டர் ராஜூசுந்தரம் இயக்கும் இந்த படத்தின் சூட்டிங் தற்போது இறுதிகட்டத்தை எட்டி விட்டது. ஏகன் படத்தின் சூட்டிங் முடிந்ததும், சிவாஜி பிலிம்ஸ் சார்பில் நடிகர் பிரபு தயாரிக்கும் ஒரு படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். டிசம்பரில் படத்துக்கு பூஜை போடவிருக்கிறார்கள். டைரக்டர் கவுதம் இயக்கும் இப்படத்தில் அஜித்குமாரை பில்லாவில் காட்டியதைவிட வித்தியாசமாகவும், அழகாகவும், ஸ்டைலாகவும் காட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த புதிய படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை சமீரா ரெட்டி நடிக்கிறார்.
Labels:
ajith
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!