CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-08-07

100 புதுமுகங்கள் நடிக்கும் புதிய படம்

முதன் முதலாக தமிழ் சினிமா ஒன்றில் 100 புதுமுகங்களை அறிமுகம் செய்யவிருக்கிறார்கள்.

இயக்குனரும், தயாரிப்பாளருமான கிருஷ்ணன் சேஷாத்ரி இயக்கி வரும் படம் முதல் முதல் முதல் வரை. இந்த படத்தில்தான் 100 புதுமுக நடிகர் & நடிகர்களை நடிக்க வைத்துள்ளார் கிருஷணன் சேஷாத்ரி. இதுபற்றி அவர் கூறுகையில், சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற பெரியப் பெரிய நகரங்களில் வசிக்கும் இளைஞர்களின் வாழ்க்கை முறை நாளுக்கு நாள் மாறி வருகிறது. இதனை கருப்பொருளாகக் கொண்டுதான் முதல் முதல் முதல் வரை என்ற படத்தை எடுத்து வருகிறேன். இதுவரை இந்த சப்ஜெக்டில் தமிழ் படம் எதுவும் வந்ததில்லை. இந்த படத்தில் நாயகன், நாயகி உள்பட 100 புதுமுக நடிகர் & நடிகைகளை அறிமுகப்படுத்தவுள்ளேன், என்றார்.

1 comments:

Samuthra Senthil said...

இந்த செய்தி குறித்த உங்களது கருத்தா பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!