
நடிகை பாவனாவும், நிதின் சத்யாவும் காதலிப்பதாகவும், ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் வெளியான வதந்திகளுக்கு நிதின் சத்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தெலுங்கு படமொன்றில் பாவனாவும், நிதின்சத்யாவும் சேர்ந்து நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் சூட்டிங்கின் போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி விட்டதாகவும், இருவரும் சேர்ந்தே ஊர் சுற்றுகிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகி வந்தன. அதன் பின்னர் இவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் வதந்திகள் பரபரப்பட்டன. இந்த வதந்திகளுக்கெல்லாம் நடிகர் நிதின் சத்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நிதின்சத்யா கூறுகையில், நான் இதுவரை 3 படங்களில் நடித்துள்ளேன். தற்போது பந்தயம், முத்திரை ஆகிய படங்களில் கதாநாயகனாக நடிக்கிறேன். நான் காதலுக்கு எதிரி அல்ல. ஆனால் இப்போதைக்கு எந்த பெண்ணுக்கும் என் மனதில் இடமில்லை. சினிமாதான் எனக்கு உயிர். சினிமாவை காதலிக்கிறேன் என்றுகூட சொல்லலாம். நான் வளர்ந்து வரும் நடிகன். இப்போது காதல், கீதல்னு போனா அது என் வளர்ச்சியை பாதிக்கும், என்று தெளிவாக பதில் சொல்கிறார்.
சூட்டிங்கின்போது நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அடித்ததாக கூறப்படுகிறதே என்று கேள்வி கேட்டதற்கு பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. பந்தயம் படத்தின் நான் விஜய்யின் தீவிர ரசிகராக நடிக்கிறேன். இப்போதைக்கு அதை மட்டும்தான் உங்களிடம் சொல்ல முடியும் என்று எஸ்கேப் ஆகி விட்டார் நிதின் சத்யா.
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!