நடிகை மும்தாஜ் விளம்பரத்துக்காக சிகரெட் குடித்தார்.
டைரக்டர் ஷக்தி சிதம்பரம் இயக்கி வரும் படம் ராஜாதிராஜா. இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ்தான் ஹீரோ. 6 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இந்த 6 பேருமே படத்தில் தனக்குத்தான் முக்கியமான கேரக்டர் என்று கூறி வருகிறார்கள். ஆனால் உண்மையிலேயே 6 பேரில் ஒருவரான நடிகை மும்தாஜுக்கு முக்கியமான கேரக்டர் அமைந்திருக்கிறது. ஆம்..! படத்தில் மும்தாஜ் வில்லியாக நடிக்கிறார்.
இதுபற்றி மும்தாஜ் நிருபர்களிடம் கூறுகையில், ராஜாதி ராஜாவில் நான் வில்லியாக நடிக்கிறேன். ஆண்களை கண்டாலே வெறுக்கும் கேரக்டர். இப்பட விளம்பரத்துக்காக சிகரெட் குடிப்பது போல போட்டோ எடுத்தனர். ஆனால் படத்தில் அந்த மாதிரி காட்சிகள் கிடையாது, என்றார்.
2008-08-11
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே..!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!