CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-08-22

நடிகை மதுமிதாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்


நடிகை மதுமிதாவுக்கும், தெலுங்கு நடிகர் சிவபாலாஜிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

ஐதராபாத்தை சேர்ந்தவர் நடிகை மதுமிதா. பார்த்திபனுடன் குடைக்குள் மழை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு இங்கிலீஷ்காரன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது யோகி, சொல்ல சொல்ல இனிக்கும், காதல் மெய்பட, நல்வரவு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மதுமிதாவுக்கும், தெலுங்கு நடிகர் சிவபாலாஜக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இங்கிலீஷ்காரன் படத்தில் நடித்தபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அதன் பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் காதல் கைகூடியிருக்கிறது. திருமண தேதி குறித்து இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!