சென்னை 28, சுப்பிரமணியபுரம் ஆகிய படங்களில் நடித்த நடிகர் ஜெய், நல்ல படங்களுக்காக 4 ஆண்டுகள் காத்திருந்தாராம். இப்போது ராக்கோழி, அவள் பெயர் தமிழரசி வயது 18 மாநிறம், அதே நேரம் அதே இடம் என பிஸியாக இருக்கிறார். சினிமாவில் இந்த இடத்தை பிடிக்க என்னென்ன முயற்சிகளை செய்தீர்கள் என்று அவரிடம் கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
நான் நடிப்பதற்காக முயற்சி செய்யவில்லை. கீ போர்டு வாசிப்பதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம். அதன்படி பெரியப்பாவிடம் (தேவா) பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது பகவதி படத்தின் பாடல் கம்போஸிங் நடந்தது. அப்போது அங்கு வந்த இயக்குநர் வெங்கடேஷ்தான் பார்ப்பதற்கு விஜய் போல இருக்கிறாய் என்று கூறி பகவதி படத்தில் விஜய் தம்பியாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு சில வாய்ப்புகள் வந்தன.
ஆனால் அவையெல்லாம் விஜய்யை இமிடேட் செய்வது போன்ற கதைகள். அதனால் அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டேன். எந்தப் படத்திலும் விஜய்யை இமிடேட் செய்துவிடக் கூடாது என்பதற்காகக் கிட்டத்தட்ட நான்கரை வருடங்கள் காத்திருந்தேன். அதன்பிறகுதான் "சென்னை 600 028' வாய்ப்பு கிடைத்தது. அடுத்து "சுப்ரமணியபுரம்' ஹிட் ஆகி தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. விஜய் போல நடிப்பதாக இருந்தால் எதற்காக வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டும். முடிந்தவரை விஜய் சாயல் இல்லாமல் நடிப்பேன். இயக்குநர்கள் உதவியோடு எனக்கென்று ஒரு பாணியை உருவாக்குவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
2008-08-28
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!