நடிகை பாவனாவுக்கும், நடிகர் நிதின் சத்யாவுக்கும் காதல், இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர் என்றெல்லாம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வதந்திகள் கிளம்பின. இதனை ஆரம்பத்தில் இருந்தே மறுத்து வரும் பாவனாவிடம் ஒரு மினி பேட்டி:
கேள்வி : உங்களைப் பற்றி தற்போது வந்துகொண்டிருக்கும் வதந்திகள் பற்றி?
பதில்: பொதுவா என்னைப் பற்றி கிசுகிசுக்களே வருவதில்லை என்று நீங்கள்தான் (பத்திரிகையாளர்கள்) கேட்பீர்கள். இப்போ உங்களுக்காகவே கிசுகிசுக்கள் வந்திருக்கிறதோ என்னவோ?
கேள்வி : நிதின் சத்யாவுடன் காதல், ரகசிய திருமணம் என்று வதந்தி வந்திருக்கிறதே?
பதில் : காதலாவது, கத்தரிக்காயாவது..! எனக்கு இதுவரை யாருடனும் காதல் வரவில்லை. நிதினுடன் நட்பு மட்டுமே இருக்கிறது.
கேள்வி : காதலிக்கவில்லை என்கிறீர்கள். எதனால் இந்த வதந்தி வந்தது? நெருப்பில்லாமல் புகையுமா?
பதில் : தெலுங்கில் நிதின் சத்யாவுடன் ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறேன். இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தாலே வதந்திக்கு பஞ்சமா என்ன? ஏற்கனவே ஜெயம் ரவியுடன் நடித்தபோது அவரை நான் காதலிப்பதாக எழுதினார்கள். அடுத்து தெலுங்கு நடிகர் கோபி சந்துடன் இணைத்து எழுதினார்கள். இப்போது நிதின் சத்யா? அடுத்து ஜெயம் கொண்டானில் நடித்து வருகிறேன். அவருடன் காதல் என்று கிசுகிசு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இவ்வாறு பாவனா கூறினார்.
2008-08-20
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!