Rajinikanth
குசேலன் விவகாரத்தில் ரஜினிகாந்த் புதிதாக ஒரு விஷயத்தை பேசி இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் நடிகராகவே நடித்து வெளிவந்துள்ள படம் குசேலன். இந்த படத்தை கர்நாடகாவில் திரையிடுவதாற்காக கன்னட மக்களிடம் மண்டியிட்டு விட்டார் என்ற பரபரப்பு அடங்குவதற்குள் ரஜினிகாந்தின் புது பேச்சு பரபரப்பை கிளப்பியுள்ளது.
குசேலனின் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தனது சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை வழங்குவதாக அறிவித்திருந்த ரஜினிகாந்த், நிதிஉதவி வழங்கும் விழாவை நடத்தினார். சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் உதவிகளை வழங்கிய ரஜினிகாந்த் பேசியதாவது:
குசேலன் படம் வெளியாறதுக்கு முன்னாடி நடந்த பல விஷயங்கள் என்னை ரொம்பவே யோசிக்க வெச்சிருச்சி. குசேலன் படத்துக்காக, குசேலனை கர்நாடகாடுல ரீலிஸ் பண்றதுக்காக நான் மன்னிப்பு கேட்டுட்டேன்னு சிலர் சொல்றாங்க. நான் கன்னட மக்களிடமோ, அங்குள்ள கன்னட அமைப்புகளிடமோ எந்த மன்னிப்பும் கேட்கவில்லை.
ஒகேனக்கல் தண்ணீருக்காக சென்னையில் உண்ணாவிரதம் இருந்தபோது மேடையின் நான் பேசினேன். அப்போ நான் ஒரு விஷயத்தை தெளிவா பேசியிருக்கணும். இந்த குடிநீர் திட்டத்தை எதிர்த்து தமிழ் மக்களுக்கு எதிரா வன்முறையில் ஈடுபடுறவங்களையும், பொது சொத்துக்கு சேதம் செய்யுறவங்களையும் உதைக்க வேண்டாமா? என்று பேசியிருக்கணும். இதைத்தான் இப்போது தெளிவுபடுத்தியிருக்கேன். குசேலன் வெளியாக ஒத்துழைங்கன்னு கேட்டிருக்கேன். அவ்வளவுதான். நான் கூறியதை கன்னட மக்கள் தப்பா எடுத்துக்க வேண்டாம்னுதான் வருத்தம் தெரிவிச்சிருக்கேன். இது எனக்கு ஒரு பாடம். இனி எந்த நிகழ்ச்சியில பேசுனாலும் என்ன பேச வேண்டும் என கத்துக்கிட்டேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
1 comments:
ரஜினியின் இந்த பேச்சு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!