
இயக்குனரும், நடிகருமான சேரனால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை நவ்யா நாயர். மார்டன் டிரஸ் அணிந்தாலும், கிளாமராக நடிக்க மாட்டேன் என்று கோபிகாவைப் போல உறுதிமொழி எடுத்திருந்த இந்த கேரளத்து கிளி, இப்போது கவர்ச்சி பிரியாணியே விருந்து வைக்க தயாராகி விட்டாராம். தற்போது நவ்யா நாயர், நடிகர் ஸ்ரீகாந்துடன் எட்டப்பன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நவ்யா நாயர் பல காட்சிகளில் படு கிளாமராக நடித்துள்ளார். குறிப்பாக ஒரு பாடல் காட்சியில அம்மணியின் கவர்ச்சியில் ஒட்டுமொத்த ரசிகர்களும் கிறங்கிப்போவார்கள் என்கிறது யூனிட்.
இதுபற்றி நவ்யா நாயரிடம் கேட்டால், கதைக்கு தேவைப்பட்டதால் கவர்ச்சியாக நடிக்க ஒத்துக் கொண்டேன். அதற்காக திகட்டும் அளவில் எல்லாம் நடிக்கவில்லை. படம் வந்தபிறகு பாருங்கள். எனது ஹோம்லி மார்டன் கேர்ள் இமேஜை மாற்றிக் கொள்ள மாட்டேன். இந்த படத்தில் கிளாமர் ரோல் பண்ணி விட்டேன் என்பதற்காக அடுத்தடுத்த படங்களிலும் கிளாரம் ரோல் பண்ண மாட்டேன். வழக்கமான மார்டன் கேர்ளாகத்தான் நடிப்பேன், என்றார் கண்ணக்குழி சிரிப்புடன்...!
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!