2008-08-03
காதல் சர்ச்சையில் நடிகை பாவனா
தனது தெத்துப்பல சிரிப்பழகால் தமிழ் ரசிகர்களின் இடங்களில் பட்டா போட்டு குடியேறியிருக்கும் நடிகை பாவனாவும் இப்போது காதல் சர்ச்சையில் சிக்கி விட்டார்.
சினிமா வாழ்க்கை என்று வந்து விட்டால் வதந்திகளுக்கு பஞ்சமே இருக்காது. அதிலும் ஒரு நடிகையைப் பற்றிய வதந்தி கிளம்பாமல் இருந்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவில் வதந்திகளின் ஆதிக்கம் இருந்து வருகிறது. இந்த விஷயத்தில் நடிகை பாவனா உள்ளிட்ட சில நடிகைகள் மட்டும் எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் தப்பித்து சென்று கொண்டிருந்தார்கள்.
இதோ... பாவனாவும் காதல் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். தமிழ் சினிமாவின் ஹோம்லி நடிகையான பாவனா, தற்போது தெலுங்கில் நடிகர் நிதின் சத்யாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகன், கதாநாயகியாக நடித்ததாலோ என்னவோ இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கியிருக்கிறார்கள். அதோடு ஒன்றாகவே ஷாப்பிங் முதல் ஹோட்டல் வரை செல்கிறார்களாம். இதனால் பாவனாவுக்கும், நிதினுக்கும் காதல் என்ற செய்திதான் தெலுங்கு சினிமா உலகின் லேட்டஸ்ட் பரபரப்பு செய்தி. இதுபற்றி நடிகர் நிதினிடம் கேட்டால், எல்லாம் வதந்தி தான் சார்... என்று ஒரே வரியில் சொல்லி முடிக்கிறார். பாவனாவோ... என்ன கேள்வி இது? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை... என்று ஒருகேள்வி, ஒரு பதில் ரீதியில் பதிலளிக்கிறார்.
Labels:
bhavana
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!