CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-08-05

பணத்துக்காக நடிகைகளை டார்ச்சர் செய்யும் அம்மாக்கள்


பணத்துக்காக நடிகைகளை டார்ச்சர் செய்யும் அம்மாக்கள் பற்றிய கதையை சினிமாவாக எடுத்து வருகிறார்கள். இந்த படத்தில் நடிகை பூர்ணாதான் கதாநாயகியாக நடிக்கிறார்.

டைரக்டர் போஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கொடைக்கானல். இந்த படத்தில் நாயகியாக நடிப்பவர் நடிகை பூர்ணா. மலையாள படங்களில் ஷாம்னா என்ற பெயரில் நடித்து வந்த இவர் தமிழுக்காக பூர்ணா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். இவர் முதன் முதலில் ஒப்பந்தமான படம் கொடைக்கானல் என்கிறபோதிலும், அதற்கு அடுத்தபடியாக ஒப்பந்தமான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் ரீலிஸ் ஆகி விட்டது. முனியாண்டி படத்தில் தாமரை என்ற பெயரில் நடித்திருந்த பூர்ணா, பாவாடை தாவணியில் வந்து தமிழக இளம் ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.

நடிகர் விஜய் வேறு, கொடைக்கானல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசும்போது, பூர்ணாவை சின்ன அசின் என்று வர்ணித்து விட்டார். இந்நிலையில் தற்போது கொடைக்கானல் படத்தில் கதை கசியத்தொடங்கியிருக்கிறது. கொடைக்கானல் படத்தின் கதைக்கரு என்ன தெரியுமா? பணத்துக்கு ஆசைப்படம் ஒரு பெண் தனது மகளை சினிமா நடிக்க வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார். சினிமாவுக்கு வந்த பின்னர் வேறு பல குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிப்பதற்காக பெற்ற மகளுக்கே எல்லா விதமான டார்ச்சர்களையும் கொடுக்கிறாராம். கடைசியில் கொடுமைக்கார தாயாரிடம் இருந்து அந்த நடிகை எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதையாம். (அட... இது நம்ம விந்தியமான நடிகையின் சொந்தக்கதை போல இருக்கே...!)

4 comments:

Samuthra Senthil said...

இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே..!

Anonymous said...

very cool.

Tech Shankar said...



Enna Kodumai sir idhu?

Pinnooottam pottutten..


ers said...

நிஜம் தாங்க...

பல நடிகைகளை கட்டிலுக்கு தள்ளுவதே அம்மாக்கள் செய்யும் காரியம் தான். நடிகை என்று ஆகி விட்டால் அம்மா என்பது மாமா என்றாகிவிடும்.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!