Actress Geneeliya
நடிகை ஜெனிலியா ரூ.1 கோடி சம்பளம் கேட்டு வருகிறார்.சினிமாவில் நடிகர்களுக்கு மட்டும்தான் கோடிக்கணக்கில் சம்பளம் தரப்படுகிறது. நடிகைகள் எவ்வளவு சிரத்தை எடுத்து நடித்தாலும் சம்பளம் மட்டும் லட்சங்களை தாண்டாமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு பல காலமாக நீடித்து வருகிறது.
இந்த நிலையில் நயன்தாரா ரூ.1 கோடி சம்பளம் கேட்கத் தொடங்கிவிட்டார். இந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் நடிகை ஜெனிலாயா. பாய்ஸ் படத்தில் ஹரிணியாக அறிமுகமான இவர், சச்சின் படத்தின் போது ஜெனிலியா டிசாசோ என்று பெயரை மாற்றிக் கொண்டார். தமிழில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் எதுவும் ஓடவில்லை என்றாலும், தெலுங்கு மற்றும் இந்தியில் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் வெளியான சந்தோஷ் சுப்பிரமணியம் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜெனிலியா ரூ.1 கோடி சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும் மிரள வைக்கிறாராம். ஜெனிலியாவின் சம்பள விவகாரத்தை கேட்டு பல தயாரிப்பாளர்கள் கண்டும் காணாமல் சென்று விடுகிறார்களாம்.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!