எத்தனையோ புதுமுக நடிகைகள் வந்தாலும், ஒருசில நடிகைகள் மட்டுமே பார்த்ததும் பச்சக் என்று மனதில் பற்றிக் கொள்வார்கள். அந்த வரிசையில் தனது குறுகுறு பார்வையால் இளசுகளின் மனதில் பட்டா போட்டு குடியேறியிருப்பவர் நடிகை ஸ்வாதி. சுப்பிரமணியபுரம் படத்தில் பாவாடை, தாவணியுடன் கிராமத்து பதுமையாக தோன்றிய இந்த ஸ்வாதி எத்தனையே இளசுகளின் மனதில் இருக்க... அம்மணியின் மனதிலோ ஒருவர் மட்டும் குடியேறியிருக்கிறாராம்.
யார் அவர்? என்ற கேள்விதான் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாக்காக இருக்கிறது. ஸ்வாதி தற்போது அஸ்தா செமா என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். அவருடன் அந்த படத்தில் நடிப்பவர் நடிகர் மகேஷ்பாபு. இந்த மகேஷ் பாபுடன்தான் ஸ்வாதிக்கு காதல் என்ற பேசப்பட்டு வருகிறது. இதுபற்றி அவரிடம் கேட்டால், தனது தெத்துப்பல் சிரிப்புடன், வதந்திகளுக்கு நான் பதில் சொல்றதா இல்லை என்கிறார். யாரையாவது காதலிக்கிறீர்களா, இல்லையா என்று கேட்டதற்கு, இப்போதைக்கு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. காதல், கல்யாணம் என்பதில் இப்போது ஆர்வம் இல்லை. எனக்கு 18 வயதுதான் ஆகிறது, என்று பட்டாசுபோல வெடிக்கிறார். (சுப்பிரமணியபுரத்துல நடிச்ச அந்த அமைதியான பெண்ணா இது...! அம்மாடியோவ்... என்ன பேச்சு பேசுறாங்க...!)
நடிகை ஸ்வாதியின் எக்ஸ்குளூசிவ் கேலரியை பார்க்க இங்கே கிளிக்குங்கள்.
2008-08-04
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!
பச்சை கிளி சீக்கிரமா மாட்டது
http://loosupaya.blogspot.com
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!