2008-08-06
பெசன்ட் நகர் பீச்சில் சூட்டிங்கிற்கு தடை
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டதால் ஆர்யா நடிக்கும் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது.
நடிகர் ஆர்யா, நடிகை த்ரிஷா இணைந்து நடித்து வரும் படம் சர்வம். இந்த படத்தை டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கி வருகிறார். சென்னை புறநகர் பகுதிகளில் இப்படத்தின் சூட்டிங் நடந்து வந்தது. இதைத்தொடர்ந்து பெசன்ட் நகர் கடற்கரையிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்ட டைரக்டர் விஷ்ணுவர்தன் மற்றும் குழுவினர் எலியட்ஸ் பீச்சில் குவிந்தனர். சூட்டிங் குழுவை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட அங்கு வந்து நிற்பதை பார்த்த பொதுமக்கள் கூட்டம் கூடத் தொடங்கி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதை பார்த்த போலீசார் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் டைரக்டர் விஷ்ணுவர்தனிடம், சென்னை நகருக்குள் பகல் நேரத்தில் சூட்டிங் நடத்த அனுமதி கிடையாது. இரவு 11 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் வந்து சூட்டிங்கை நடத்திக் கொள்ளுங்கள். இப்போது இங்கு நடத்தினால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்று எடுத்துக் கூறினார்கள். இதையடுத்து விஷ்ணுவர்தன் மற்றும் குழுவினர் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புறப்பட்டுசென்றனர். பின்னர் இரவில் வந்து எடுக்க நினைத்த காட்சிகளை எடுத்து முடித்தனர்.
Labels:
arya,
shooting spot
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!